முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.
பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.
இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(
ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.
இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.
மேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.
முக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கியகோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றை USB டிரைவிலோ, DVD யிலோ Backup எடுத்துகொள்ளவும். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால் தகவல்களை இழக்கநேரிடலாம்.
30 அக்., 2009
ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க
Recommended Articles
- Computer Service
Drive ஐ மறைத்து வைக்க வேண்டுமா?Jan 15, 2010
Drive ஐ மறைத்து வைக்க வேண்டுமா? நாம் கணணியில் தகவல்களை பாதுகாத்து வைப்பதற்கு மென்பொருட்கள...
- Harddisk
ஹார்ட் டிஸ்க் : அன்றிலிருந்து இன்று வரைDec 07, 2009
நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொ...
- Harddisk
ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்கOct 30, 2009
முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் ப...
- Harddisk
ஹார்ட்டிஸ்க் இட பற்றாகுறை - பெரிய கோப்புகளை கண்டறியOct 30, 2009
கணினி வாங்கும் பொழுது நீங்கள் போதுமான கொள்ளளவு கொண்ட ஹார்ட்டிஸ்க் வாங்கி இருப்போம். பெரும்பாலானோர் வீடியோ , மென்பொருள்களை தரவிறக்கி உபயோகித்து விட...
Newer Article
தரவிறக்கங்களை நிர்வகிக்க இலவச மென்பொருள்
Older Article
கணினியை இணைய வழங்கியாக மாற்றுதல்
Tagged In:
Harddisk
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக